தமிழக பாஜக தலைவரானார் அண்ணாமலை !

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போதைய பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி பாஜக தலைமை அறிவித்துள்ளது.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சியில் அண்ணாமலை போட்டியிட்டார்.

2011ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநில கேடரானார். சீனியர் எஸ்.பி.யாகப் பதவியில் இருந்தபோது 2019ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியிலிருந்து விலகினார்.