Chandrababu Naidu tests covid positive : சந்திரபாபு நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி !

Chandrababu Naidu tests covid positive : சந்திரபாபு நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி
சந்திரபாபு நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி

Chandrababu Naidu tests covid positive : ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான நாரா சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்தார். அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், தன்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் விரைவில் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

சாமானியர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தெரிந்ததே. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் வாங்கவீட்டி ராதாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடன் ஆந்திர அமைச்சர் கோடாலி நானிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.Chandrababu Naidu tests covid positive

கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க : petrol and diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !