அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்புடைய சேத விவரம் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.