தல 61 டைரக்டர் வெளியிட்ட அசத்தல் அப்டேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் வினோத் தான் இயக்குவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது தல 61 படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் படம் 2022 தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் விரைவில் படப்பிடிப்புகளை தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.