Omicron: மீண்டும் ஆன்லைன் வகுப்புக்கு பரிந்துரை

Omicron in tamilnadu : மெல்ல அதிகரிக்கும் ஓமிக்ரான் !
மெல்ல அதிகரிக்கும் ஓமிக்ரான் !

Omicron: நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிய நிலையில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று குறைந்தநிலையில், கடந்த சில மாதங்களாக கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால், தற்போது பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், நாட்டில் தற்போது நிலவி வரும் ஒமைக்ரான் சூழலை கருத்தில் கொண்டு, மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவது போன்ற திட்டங்கள் குறித்து தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: tn school education department : ஜன. 2 வரை பள்ளிகள் மூடல் !

 tn school education department : புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாட்டைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.பல ஐரோப்பிய நாடுகள் மிகவும் தொற்றுநோயான புதிய கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்துள்ளன.

கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டின் 33 வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன.இதன் மூலம், மாநிலத்தின் ஓமிக்ரான் வழக்குகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில், விடுமுறைக்கு பிறகு வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.tn school education department

மேலும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்தார்.

இதையும் படிங்க : Omicron in tamilnadu : மெல்ல அதிகரிக்கும் ஓமிக்ரான் !