Director Suraj: இயக்குநர் சுராஜ்க்கும் கொரோனா பாசிட்டிவ்

director suraj
இயக்குநர் சுராஜ்க்கும் கொரோனா பாசிட்டிவ்
Director Suraj: லண்டனிலிருந்து திரும்புபவர்களுக்கான உடல் பரிசோதனை நடந்தது. அதில் வடிவேலுவுக்கு கொரோனா பாஸிட்டிவ் வரவே இப்போது ராமசந்திராவில் அட்மிட் ஆகியிருக்கிறார்.நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து வடிவேலுடன் உடன் இருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம்.

நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கான இடத்தேர்வுக்காக லண்டன் போயிருந்தார். அவருடன் இயக்குநர் சுராஜ், லைகா தமிழக நிர்வாகி தமிழ்குமரன் என மூவர் போயிருந்தார்கள். இப்போது வடிவேலு அங்கிருந்து திரும்பி வரும் போது வழக்கமாக லண்டனிலிருந்து திரும்புபவர்களுக்கான உடல் பரிசோதனை நடந்தது. அதில் கொரோனா பாஸிட்டிவ் வரவே இப்போது ராமசந்திராவில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

உடல் நலம் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து மருத்துவ கவனிப்பில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த கொரோனோ ஒமைக்ரான் வகையைச் சேர்ந்ததா என்று மேற்கொண்டு பரிசோதனை முடிவில் தெரியவரும் என்றனர். இந்த நிலையில் நடிகர் வடிவேலுவோடு லண்டன் சென்ற இயக்குநர் சுராஜ்க்கும் கொரோனா பாசிட்டிவ் வந்திருக்கிறது.

அவருக்கும் உடல்நிலை சற்று சரியில்லாமல் இருந்ததால், டெஸ்ட் செய்ததில் அவருக்கும் கொரோனா இருப்பது உறுதி ஆகியிருக்கிறது. அவரது ‘S’ gene டிராப் ஆனதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால் அவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனாவாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. உடன் இருக்க யாருக்கும் அனுமதி இல்லை என்பதால் வீட்டிலிருந்து அவருக்கு துணையாக யாரும் இல்லை. ஜனவரியில் படப்பிடிப்பு நடைபெற ரெடியாக இருந்த யூனிட் சற்றே அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

(Director Suraj tested positive for covid 19)

இதையும் படிங்க: New Restrictions: தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்