உணவுக்காக 9 வயது மகள் விற்பனை !

ஆப்கான் நாட்டை சேர்ந்த ஒரு தந்தை தனது குடும்பத்திற்கு உணவு வாங்குவதற்காக தனது 9 வயது மகளை குழந்தை மணமகளாக விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தனது மகள் பர்வானாவை 55 வயதான கோர்பன் என்ற வாங்குபவருக்கு விற்ற நாளில் அப்துல் மாலிக் கண்ணீர் விட்டு அழுதார் என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது

வடமேற்கு பட்கிஸ் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் இடம்பெயர்ந்தோர் முகாமில் இந்த குடும்பம் உள்ளது.மேலும்வறுமையின் காரணமாக தனது 9 வயது மகளை 55 வயதான ஒருவருக்கு மணமகளாக விற்றுள்ளார்.

இது குறித்து அந்த தந்தை தெரிவித்துள்ளது,குற்ற உணர்வு, அவமானம் மற்றும் கவலையுடன் “உடைந்ததாக” உணர்ந்ததாகக் கூறினார்.நாங்கள் எட்டு நபர்கள் குடும்பத்தில் உள்ளோம்.மற்ற குடும்ப உறுப்பினர்களை வாழ வைக்க நான் விற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் கையகப்படுத்தப்பட்டதில் இருந்து ஆப்கானிஸ்தான் குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளுக்குப் போராடி வருகிறார்கள் .ஆனால் பர்வானாவை திருமணம் செய்து கொள்ளாமல், வீட்டு வேலை செய்ய வைக்க விரும்புவதாக வாங்கியவர் தெரிவித்துள்ளார்