அட நம்ம நிவேதா பெத்துராஜா இது !

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து,டிக் டிக் டிக்,சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தவர்.இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்போது இவருக்குள் மற்றோரு திறமையா என்று ரசிகர்கள் வியந்துள்ளனர்.இவர் Formula Race Car Level 1 பயிற்சியை முடித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுவது,கார்களின் மீதான ஆர்வம் சிறு வயதிலேயே ஆரம்பித்துவிட்டது.பல வருடங்களாக எனக்கு இருந்த ஆர்வம் காரணமாக 2015-ல் ‘Dodge Challenger’ ஸ்போர்ட்ஸ் காரை மிக ஆசையுடன் வாங்கினேன்.

நான் சென்னை வந்த பிறகு, சென்னையில் சில மோட்டார் ட்ராக்ஸ்களை சென்று பார்வையிட்டேன். ஆனால் அப்போது ஒரு போதும், நானும் ரேஸ் டிராக்கில் கார் ஒட்டுவேன் என நினைத்து பார்க்கவில்லை.

கோயம்புத்தூரில் உள்ள ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ் ரேஸிங்கிற்கு எனது சகோதரருடன் சென்றபோது, அவர்கள் அளிக்கும் பயிற்சியை, என்னால் முடிக்க முடியுமா ? எனும் பயம் என்னுள் உருவானது. கார்களின் மீதான காதல் மற்றும் ஆர்வத்தால் மூன்று மாதம் முன்னதாகவே பயிற்சியில் சேர்ந்தேன் என்று தெரிவித்தார்.