லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நெற்றிக்கண் ட்ரைலர் வெளியானது !

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா.இவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் சமீப காலங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2011 ஆண்டு வெளிவந்த கொரிய மொழி படமான ப்ளைண்ட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா கண் பார்வையில்லாதவராக நடித்திருக்கும் படம் நெற்றிக்கண்.

இந்த படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.கொரோனா தொற்று இருக்கும் காரணத்தினால் திரையரங்குகள் மூடப்பட்டன.தற்போது இந்த படம் ஓடிடியில் ரிலீஸாகவிருக்கிறது.

மேலும் படம் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ட்ரெய்லரை இன்று வெளியிட்டுள்ளனர்.