பிறந்தநாள் லைலா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தமிழ்திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது அதேபோல் தீனா படத்தில் தல அஜித் அவர்களுக்கு சரியான ஜோடியாக திரையில் தோன்றுவார்.
தமிழ் ரசிகர்களுக்கு இவரது சிரிப்பு மிகவும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இவர் சிரிக்கும்போது மிகவும் அழகாக காட்சி அளிப்பார்
இவர், ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
இதையும் படிங்க: முடி கருமையாக செழித்து வளர உதவும் கரிசலாங்கண்ணி…!



