இன்று நடிகை தேவயானி பிறந்தநாள்

நடிகர் விஜய்யைப் போன்று நடிகை தேவயானியும் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

தேவயாணி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகையாவார்.

இவர் நடித்த காதல் கோட்டை, சூர்யா வம்சம், பாரதி மற்றும் பல திரைப்படங்களில் தனது நடிப்பால் முத்திரை பதித்தவர். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிப்பரப்பான கோலங்கள், முத்தாரம் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி இயக்குநர் ராஜகுமரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தேவயானி – ராஜகுமரன் தம்பதியினருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்று இரு மகள்கள் இருக்கின்றானர். இந்த நிலையில், நடிகை தேவயானி இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வாழத்து தெரிவித்து வருகின்றனர்.