HBD Aishwarya Rajesh : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்று பிறந்தநாள் !

HBD Aishwarya Rajesh : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்று பிறந்தநாள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்று பிறந்தநாள்

HBD Aishwarya Rajesh : ஐஸ்வர்யா ராஜேஷ் ஜனவரி 10, 1990 ம் ஆண்டு பிறந்துள்ளார்.இவர் தமிழ்,தமிழ், தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். முதன் முதலாக இவர் சன் தொலைக்காட்சியில் ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பணியை ஆரம்பித்தார்.

பிரபல நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றார்.இதனை தொடர்ந்து 2011ம் ஆண்டு ‘அவர்களும் இவர்களும்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு 2012ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம் அட்டகத்தி படத்தில் நடித்து பிரபலமானார்.

2014ஆம் ஆண்டு வெளியான ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது.காக்கா முட்டை’ படம் இவருக்கு புகழை வாங்கித்தந்தது.HBD Aishwarya Rajesh

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனை யாக நடித்து பெயர் பெற்றார்.தனது நிறம் , உடை , தோற்றம் போன்றவை மற்ற நடிகைகளில் இருந்து மாறுபட்டிருப்பதால் நான் புறக்கணிக்கப்பட்டேன் என மேடை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Horoscope Today : இன்றைய ராசி பலன் !