Corona virus: நடிகர் ஜெயராம், எஸ்.வி.சேகருக்கு கொரோனா தொற்று

coronavirus-cases-in-india
குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

Corona virus: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், விஷ்ணு விஷால், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வருகிறார்கள். இந்நிலையில், 80-களின் காலகட்டத்தில் பல படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஜெயராம். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கு கடந்த 2 நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.

இதையும் படிங்க: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் விடுமுறை நீட்டிப்பு