நடிகர் சந்தானம் நடிக்கும் புதியப்படம்!!!

அறிமுக இயக்குநர் ஆர் ஸ்ரீனிவாசன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மட்டுமல்லாமல் இதுவரை ஏற்றிராத புதிய வேடத்தில், மற்றொரு அழகிய பரிணாமத்தில் சந்தானம் நடிக்கிறார்.

இன்றைய அரசியல் அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் பல சுவாரஸ்யமான காட்சிகளும் இதில் இடம்பெறும். புதுமுக நடிகை இதில் கதாநாயகியாக நடிக்கிறார். அரசு வழிகாட்டுதலின் படி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி படப்பிடிப்பு நடைபெறும்” என்றார்.