நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று

Actor Mammootty.
நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று

லையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மலையாள திரையுலகை சேர்ந்த விஐபி.,க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

70 வயதாகும் மம்முட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். ஏறக்குறைய 400 க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்துள்ளார். மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் தற்போது மலையாளத்தில் டாப் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மம்முட்டி தற்போது ஒரே சமயத்தில் பீஷ்ம பர்வம், புழு, நண்பகல் நேரத்து மயக்கம், சிபிஐ 5, பிலால் ஆகிய படங்களில் கடந்த சில மாதங்களாக பிஸியாக இருந்து வருகிறார். இதில் சிபிஐ 5 என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சேதுராம் அய்யர் என்ற கேரக்டரில் சிபிஐ அதிகாரியாக மம்முட்டி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் தொடர்பான போட்டோக்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் மம்முட்டிக்கு லேசான உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிபிஐ 5 படத்தின் ஷுட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மம்முட்டியின் தீவிர ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மம்முட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வீட்டு தனிமையில் இருக்கிறாரா என தெளிவாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து மம்முட்டி ட்வீட் செய்துள்ளார். அதில், தேவையான முன்னெச்சரிக்கை எடுத்த பிறகும் எனக்கு நேற்று கொரோனா உறதி செய்யப்பட்டது. லேசான காய்ச்சல் மட்டுமே உள்ளது. மற்றபடி நான் நன்றாக உள்ளேன். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் தேவையான வழிகாட்டுதலுடன் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வாழ்த்துகிறேன். எல்லா நேரமும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.