Hey Sinamika trailer : ஹே சினாமிகா ட்ரைலர் !

Hey Sinamika trailer : ஹே சினாமிகா ட்ரைலர்
Hey Sinamika trailer : ஹே சினாமிகா ட்ரைலர்

Hey Sinamika trailer : துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வாலின் ஹே சினாமிகா மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. இன்று, அதன் ட்ரைலர் வெளியிடப்பட்டது. துல்கரின் தந்தை மம்முட்டி டிரெய்லரை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

பிருந்தா இயக்கத்தில், துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள காதல் திரைப்படம்.

தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. தமிழ் டிரைலரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். தெலுங்கு டிரைலரை மகேஷ் பாபு வெளியிட, மலையாள டிரைலரை மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளனர்.

இது பார்ப்பதற்கு ஒரு முக்கோண காதல் யாக தெரிகிறது.துல்கர் சல்மானின் மனைவியாக இந்த படத்தில் அதிதி ராவ் நடித்துள்ளார்.ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் இணை தயாரிப்பாளரான குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் இந்த படம் தணிக்கை குழுவால் ‘யு’ சான்றிதழுடன் அனுமதி பெற்று மார்ச் 3 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.