ஆடி கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

ஆடி கிருத்திகை மற்றும் ஆடி 18 தினங்களில் கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனக் கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆடி கிருத்திகை மற்றும் ஆடி 18-ஐ முன்னிட்டு இன்று மற்றும் நாளை (ஆக. 3ம் தேதி) ஆகிய 2 நாட்களும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கோயில் அர்ச்சகர் மட்டுமே கலந்து கொண்டு ஆகம விதிகளின்படி பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த இரு நாட்களில் பொது தரிசனத்தில் கலந்துகொள்ளப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. திருக்கடம்பந்துறையில் பொதுமக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது