Acharya Ravi: விஜய் பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

ஆச்சார்யா ரவி
ச்சார்யா ரவி மாரடைப்பால் இன்று காலமானார்.

Acharya Ravi: பிரபல தமிழ் இயக்குநரான ஆச்சார்யா ரவி மாரடைப்பால் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர் மற்றும் நடிகராக வலம் வந்த மாணிக்க விநாயகம் இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்த துயரில் இருந்து திரையுலகினரும், ரசிகர்களும் மீள்வதற்குள் மற்றொரு துயரச்செய்தி வெளியாகியுள்ளது.

தமிழில் அனைத்துக்கும் ஆசைப்படு, டம்மி டப்பாசு, விண் ஆகிய படங்களை இயக்கியவர் ஆச்சார்யா ரவி. இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘ஷாஜஹான்’, அரவிந்த் சாமி நடிப்பில் ‘என் சுவாசக் காற்றே’, பிரபு நடித்த ‘தர்மசீலன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை.

உடல் நலக்குறைவு காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆச்சார்யா ரவி, இன்று காலை மாரடைப்பால மரணம் அடைந்தார். திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Group 4: குரூப் 4 பாடத்திட்டம் விரைவில் வெளியீடு