Earthquake in Andaman: அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்
அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

Earthquake in Andaman: அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 165 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகள் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. மிக கடுமையான நிலநடுக்கத் தாக்கத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள பகுதியில் அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளது. இன்று காலையில் போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 5.30 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.

இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது ட்விட்டரில், “ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற புள்ளிக் கணக்கில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு அந்தமான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 165 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

(4.3 Magnitude Earthquake Strikes Andaman And Nicobar Islands)

இதையும் படிங்க: மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி…!