மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்தியபிரதேசத்தின் 60 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் இன்று மாலை 6 மணி முதல் இது அமலுக்கு வருகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அதன்படி, மத்தியபிரதேசத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர் போன்ற முக்கிய நகரங்களில் கடந்த 3 வாரங்களாக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

எனினும், மத்தியபிரதேசத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 43 ஆக அதிகரித்தது. மேலும் 13 பேர் உயிரிழந்தனர்.