கூகுளுக்கு ரூ.4,400 கோடி அபராதம்

ஊடக நிறுவனங்களின் பதிப்புரிமை பெற்ற செய்திகளை பயன்படுத்தியதில் கூகுள் நிறுவனம் விதிகளை கடைப்பிடிக்கவில்லை என கூறி பிரான்ஸ் நாட்டின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் இந்திய மதிப்பில் சுமார் 4,400 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தற்போது செய்தி நிறுவனங்களின் அச்சு சந்தாக்கள் குறைந்து வருகிறது. இந்நிலையில் கூகுளானது செய்தி தேடல் முடிவுகளின் போது காட்டும் விளம்பரங்களிலிருந்து கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டுகிறது. அதிலிருந்து செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த மறுக்கின்றது என செப்., 2020-ல் ஏ.எப்.பி., உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் போட்டி ஆணையத்தில் புகாரளித்தனர். அதனை விசாரித்த போட்டி ஆணையம் கூகுளை கண்டித்ததுடன், போட்டி ஆணையம் தன் வரலாற்றில் இதுவரையில்லாத அளவு ரூ.4,400 கோடி அபராதம் விதித்தது.