Tirupati: திருப்பதியில் இலவச தரிசனத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதி

free darshan
திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆகிறது

Tirupati: திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தரிசனத்திற்கு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. முதலில் ரூ.300 கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Tirupati: திருப்பதியில் இலவச தரிசனத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதி

அதைத் தொடர்ந்து தற்போது திருப்பதியில் நேரடியாக இலவச தரிசன பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

முதலில் 10 ஆயிரம் பேர் மட்டுமே இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 30 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வருகின்றனர்.

இதையும் படிங்க: World Consumer Rights Day : உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும் கூடுதலாக 10 ஆயிரம் பேர் என மொத்தம் 40 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரணப் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் டோக்கன்கள் உயர்த்தப்பட்டு மொத்தம் 40 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இலவச தரிசனத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதி

வார நாட்களாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசனத்தில் வழிபட கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 65,155 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,213 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

இதையும் படிங்க: SP Velumani: எஸ்.பி.வேலுமணி வீட்டில் 2-வது முறையாக லஞ்ச ஒழிப்பு சோதனை