flights cancelled : 32 விமானங்கள் ரத்து !

international-flight-service-from-march-27
மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவை

flights cancelled : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் கொரோனா பரவல் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையம் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.நேற்று ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.flights cancelled

சென்னைக்கு வரவேண்டிய பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், கொச்சி, மதுரை, தூத்துக்குடி, புனே, விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஞ்சி உள்ளிட்ட 16 விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து இந்த நகரங்களுக்கு செல்ல வேண்டிய 16 விமானங்கள் என மொத்தம் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : Tn full lockdown : தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு !