மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும் என பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.3,737 கோடி செலவு ஏற்படும். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.