தமிழகத்தில் 23% பேருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கலாம்..!

கொரோனா இரண்டாம் அலை ஏற்படுவதற்கு முன்பு தமிழகத்தில் நடத்தப்பட்ட செரோ சர்வேயில் சென்னை நீங்கலாக மாநிலத்தில் 23% பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுசுகாதாரத்துறை இயக்குநகரத்தின் கீழ் இந்த சர்வே மார்ச் – ஏப்ரல் கால கட்டத்தில் நடத்தப்பட்டது. 2020 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் மாநிலத்தின் செரோ-பாதிப்பு 31.6% ஆக இருந்தபோது நடத்தப்பட்ட முதல் கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது, சராசரி ஆன்டிபாடி குறைவாக இருந்தது.

இரண்டாவது கணக்கெடுப்புக்காக சென்னை தவிர 45 சுகாதார பிரிவு மாவட்டங்களில் (Health unit districts) மொத்தம் 22,817 இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பெறப்பட்ட 22,721 மாதிரிகளில், 5,242 மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது 23.1% பாதிப்பை குறித்தது. பூந்தமல்லியில் (50.6%) அதிகமாக பாதிப்பு பதிவு செய்யப்பட்டது . குறைந்த அளவாக நாகையில் 8.9% பதிவு செய்யப்பட்டது.