அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்ற தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உண்மை நிலவரம் என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.
வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் விடுமுறை தினங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும். அந்த வகையில், நாளை மறுநாள் அக்டோபர் மாதம் தொடங்கவிருப்பதால் மொத்தமாக 21 நாட்கள் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவி வருகிறது. ஆனால், வழக்கமாக இருக்கும் வார விடுமுறைகளை தவிர்த்து 4 நாட்கள் மட்டுமே பண்டிகை விடுமுறைகள் வருகிறது.
பெரும்பாலான பண்டிகைகள் அக்டோபர் தினத்தில் தான் வரும். அக்.2 – காந்தி ஜெயந்தி, அக்.14 மற்றும் 15 ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி, அக்.19 – மிலாடி நபி. இதைத் தவிர இரண்டாம் வார விடுமுறை உட்பட அக்டோபர் 3, 9, 10, 17, 23, 24, 31 தேதிகளில் வார விடுமுறை நாட்களாகும். இந்த நாட்களில் மட்டுமே அனைத்து வங்கிகளும் மூடப்படும். எனினும், அனைத்து வங்கிகளும் ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருவதால் பொதுமக்களுக்கு பிரச்னை ஏதுமில்லை. அதுமட்டுமின்றி ஊழியர்களின் சம்பள தினங்கள் வார விடுமுறையில் வந்தாலும் சம்பளம் வங்கிகளில் செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனவே, மேற்கண்ட 11 நாட்கள் விடுமுறையை தவிர்த்து அக். 1, 6, 7, 12, 13, 16, 18, 20, 22, 26 உள்ளிட்ட தினங்களில் மஹாளய அமாவாசை, மஹா அஷ்டமி, மகரிஷி வால்மிகி ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளதால் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே வங்கிகள் இயங்காது. இதற்கான முழு அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி



