தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து விட்டது.அடுத்து தை மாதம் பொங்கல் பண்டிகை வர உள்ளது.
2022 ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு : பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆண்ட்ராய்டு மொபைல் களை தாக்கும் புதிய மால்வேர் SharkBot !



