ஈரோட்டில் பள்ளி மாணவி தற்கொலை

ஈரோடு மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோடு மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவிக்கு பலமுறை தொலைபேசியில் தெரியாத நபர்கள் மாணவிக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

ஒருநாள் இந்த தொலைபேசியை அவளது தாயார் எடுத்து யார் என கேட்டதற்கு அவர்கள் உங்கள் மகளுடைய தோழி இந்த மொபைல் எண்ணை எனக்கு தந்ததாக கூறியுள்ளார்.

அதனை அடுத்து அந்தப் பெண்ணின் தாயார் அவளுடைய தோழிக்கு தொடர்புகொண்டு மிக மோசமாக திட்டியதாகவும் மேலும் இதை தாங்க முடியாமல் அந்த பெண் கடிதம் எழுதிக் கொண்டு தற்கொலை செய்துள்ளார் இந்த கடிதத்தில் இந்தத் தற்கொலைக்கு காரணம் போன் கால் செய்த நபர் மற்றும் அந்தப் பெண்ணின் தாயார் என எழுதியுள்ளார்.