114 new bridges: ஊரகப் பகுதிகளில் 336 கோடியில் 114 புதிய பாலங்கள்..!

114 new bridges
ஊரகப் பகுதிகளில் 336 கோடியில் 114 புதிய பாலங்கள்..!

114 new bridges: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் பாலமாக அமைவது நெடுஞ்சாலைகள் தான். இந்த சாலைகள் போக்குவரத்திற்கு மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் இடையே நட்புறவை உருவாக்குவதாகவும் காணப்படுகிறது.

இதனால் இந்திய அரசாங்கம் நெடுஞ்சாலைகள் மீது அதிமுக்கியத்துவம் கொண்டு நிதியை ஒதுக்குகிறது. குறிப்பாக இந்த சாலைகள் பற்றி ஒவ்வொரு மாநில அரசும் நுணுக்கமாக அரசாணை வெளியிட்டு வரும்.

அந்த வகையில் தமிழகத்தில் 114 புதிய பாலங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள ஊரகப் பகுதிகளில் ரூபாய் 336 கோடி மதிப்பில் 114 புதிய பாலங்கள் கட்ட அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் புதிய பாலம் கட்டப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பாலங்கள் கட்டும் பணியை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. தரமான கட்டுமான பொருட்களை கொண்டு பாலம் கட்டுவது உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: Virat Kohli: 100வது போட்டியில் களமிறங்கும் கோலி..!