பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியானது

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் இணையத்தில் இன்று வெளியானது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2020-21 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.

மதிப்பெண் கணக்கீட்டில் நிலவும் குழப்பங்களை தவிர்க்க, சான்றிதழில் தேர்ச்சி மட்டும் குறிப்பிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவெடுத்தது.

அதேநேரம், உயர்கல்வி சேர்க்கைக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று காலை 11 மணிக்கு இணையத்தில் வெளியானது.

பள்ளி மாணவர்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in)தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.