தமிழகத்தில் 10-வது மெகா தடுப்பூசி முகாம் !

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர் இதை ஊக்குவிக்கும் வகையில் பல பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில்,தமிழகத்தில் 10-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது.10-வது தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 முகாம்கள் நடைபெறுகின்றன.மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.