கர்நாடகா, ஆந்திராவுக்கு 173 அரசு விரைவுப் பஸ்கள் இயக்கம்

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு போக்குவரத்து சேவையும் தொடங்கி உள்ளன.

இன்று அதிகாலை 5 மணி முதல் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து 4 மாதங்களுக்கு பிறகு இன்று தொடங்கியது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ரெயில்களில் முன்பதிவு பயணத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருப்பதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது வெளிமாநிலங்களுக்கு பஸ் சேவை தொடங்கி இருப்பதால் ஆர்வத்துடன் பொதுமக்கள் பயணம் செய்தனர்.

தமிழகத்தில் சென்னை, சேலம், தர்மபுரி, கோவை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பெங்களூரு, திருப்பதி, மைசூர், ஐதராபாத், விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 1,000 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவைக்கேற்ப பஸ் சேவையை அதிகரிப்பதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கர்நாடகா, ஆந்திராவுக்கு 173 அரசு விரைவுப் பஸ்கள் இயக்கப்படுகிறது.