இனி தீப்பெட்டி விலை 2 ரூபாய்..!

தமிழகத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டிகளின் விலை 2 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களான பாஸ்பரஸ், குளரேட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்த பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தீபம் ஏற்றுவது முதல் வீட்டில் சமையல் செய்வது அன்றாட அவசிய வேலைக்கு தீப்பெட்டியின் பங்கு முக்கியமானது. ஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு தீப்பெட்டி கிடைக்கும். ஒரு பெட்டி ஒரு மாதம் வரை கூட சிலர் பயன்படுத்துவார்கள்.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலை, 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலை மற்றும் இவற்றை சார்ந்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.