துரோகிகள் தற்போது பா.ஜனதாவின் வேட்பாளர்கள்- மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி பேசுகையில், திரிணாமுல் காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது. இந்த துரோகிகள் தற்போது பா.ஜனதாவின் வேட்பாளர்களாகி இருக்கிறார்கள்.

இது அந்த கட்சியிலேயே காலம் காலமாக உழைத்து வரும் விசுவாசிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்போது வீட்டில் இருந்தே அழுது புலம்புகிறார்கள்.


கடந்த காலங்களில் நான் கடுமையான காயங்களுக்கு ஆளாகி இருக்கிறேன். எனது தலை, முதுகு மற்றும் உடலின் பிற பகுதிகள் அனைத்திலும் காயம் ஏற்பட்டு இருக்கின்றன. எனது கால்கள் மட்டும் தப்பியிருந்தன.

ஆனால் தற்போது அவர்கள் என் காலை குறிவைத்திருக்கிறார்கள். நான் பிரசாரங்களில் பங்கேற்று விடக்கூடாது என்பதற்காக காலில் தாக்கினர். ஆனால் நான் ஒரு தெரு போராளி. என்னை அவர்களால் வீழ்த்த முடியாது.