தங்க பத்திர விற்பனை நாளை முதல் தொடக்கம்..!

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கப் பத்திரங்கள் என்பது அரசால் விற்பனை செய்யப்படுவது ஆகும். இந்தப் பத்திரங்கள் மத்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், 2020-21ஆம் ஆண்டின் தங்கப்பத்திரம் விற்பனையானது முதலீட்டாளர்களுக்காக ஜனவரி 11 முதல் 15 வரை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

தற்போது, அந்தத் தங்கப்பத்திரங்களை டிஜிட்டலில் வாங்குபவர்களுக்கு அரசு சிறப்புச் சலுகை வழங்கியுள்ளது. நிதி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இத்திட்டத்திற்கு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தும் முதலீட்டாளர்களுக்கு, தங்கப் பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.5,054 ஆக இருக்கும்.