சூரரைப்போற்று படத்தைப் பார்த்து நானும் அழுதுட்டேன் – வடிவேலு

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இத்திரைப்படத்தைப் பாராட்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு அவரது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுளளார்.

அந்தப் பதிவில், “தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தைப் பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்” என்று குறிப்பிட்டுள்ளார்.