Todays Horoscope : இன்றைய ராசிபலன் (06.07.2022)

Astrology : புதன்கிழமை உங்களின் ராசிபலன் எப்படி உள்ளது என்பதனை (Todays horoscope) அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்:
பிறருக்கு எதிரான‌ கெட்ட சிந்தனைகளை விட்டொழித்து விடுங்கள். பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். மாலையில் நண்பர்களுடன் இருப்பது நல்ல மகிழ்ச்சியைத் தரும். தொழில் ரீதியாக குறிக்கோள்களை அடைவதற்கான சக்தியை செலவிட சரியான நேரம் இது. இன்று நீங்கள் உங்களுக்காக சிறிது நேரம் செலவழிக்க முடியும். உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உங்கள் துணை இன்று தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.

ரிஷபம்:
இன்று உங்களுக்கு புதிய தோற்றம், புதிய நண்பர்கள் அமையலாம். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். திருப்திகரமான ரிசல்ட்களைப் பெற அருமையாக திட்டமிடுங்கள். அலுவலக பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும்போது மனதில் டென்சன் இருக்கும். இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள். எதிர்கால திட்டங்களை தயாரிப்பீர்கள். தினசரி தேவைகளை கவனிக்க தவறியதால் இன்று மன அழுத்தம் ஏற்படும்.

மிதுனம்:
இன்று பால் தொழிலுடன் தொடர்புடையவர்கள் நிதி ரீதியாக பயனடைய வாய்ப்புள்ளது. ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். இரவு தாமதமாக வருவது, பிறருக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் குறைபாடுகளை நீங்கள் சரிசெய்ய வேண்டும். நீங்கள் உங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். இன்று மிக ரொமான்டிக்கான நாளாக இருக்கும். ஆனால் சில உடல் நல கோளாறுகள் தோன்றும்.

கடகம்:
இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதியைத் தரும். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எல்லோரையும் ரிலாக்ஸ் செய்து இனிய மன நிலையில் வைக்கும். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் கடைசியில் ஆதாயம் தருபவையாக இருக்கும். உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உங்கள் துணை இன்று தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.

சிம்மம்:
ஆரோக்கியம் கருதி அதிக சத்தமாக பேசாதீர். மாலையில் நண்பர்களுடன் இருப்பது மிகுந்த ஆனந்தமாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும். வேலையில் நல்ல வாய்ப்புகளைத் தேடி மேற்கொள்ளும் பயணம் பயன்தரும். அதை செய்வதற்கு முன்பு பெற்றோரிடம் அனுமதி பெறுங்கள். உங்கள் துணை உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட கூடும்.

கன்னி:
போதும் என்ற வாழ்வுக்கு மனதின் உறுதியை மேம்படுத்துங்கள். எதிர்பாராத நல்ல செய்தி உங்கள் உற்சாகத்தை ஊக்கப்படுத்தும். உங்கள் குடும்பத்தினரிடம் அதைப் பகிர்ந்து கொள்வது அவர்களுக்குப் புத்துணர்வு தரும். வேலையில் இன்று நீங்கள் பாராட்டுக்களை இன்று பெறலாம். உங்கள் குடும்பத்தாரால் துணைவியுடன் மன வேற்றுமை ஏற்படலாம். ஆனால் நீங்கள் இருவரும் அதனை திறமையாக சமாளித்து விடுவீர்கள்.

துலாம்:
நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த வீட்டைச் சுற்றிய சிறிய மாற்றங்கள் செய்வீர்கள். வெற்றி பெற்றவர்களுடன் இருங்கள். எதிர்கால டிரெண்ட்கள் பற்றிய ஒரு பார்வையை அது தரும். இன்று உங்களுக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் துணை உங்களுடன் சண்டை பூசல் இன்றி அமைதியாக பொழ்தை கழிப்பார்.

விருச்சிகம்:
இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள். மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ செய்வதற்கு நேரம் இருக்கும். திருமண வாழ்க்கையில் சில பின் விளைவுகள் இருக்க கூடும். அதனை இன்று நீங்கள் சந்திப்பீர்கள்.

தனுசு:
அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். நண்பர்கள் மூலமாக முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று, உங்கள் துணையுடன் ஆன்ந்தமாக காதல் செய்வீர்கள் ஆனால் உங்கள் உடல் நலம் பாதிக்கக் கூடும்.

மகரம்:
நிதி ரீதியாக, நீங்கள் இன்று மிகவும் வலுவாக இருப்பீர்கள். கிரக நட்சத்திரம் இயக்கம் காரணமாக, இன்று நீங்கள் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் இருக்கும். இளைஞர்களை உள்ளடக்கிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ள நல்ல சமயம். உங்கள் கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள். இந்த நாள் மற்ற எல்லா நாட்களை விட சிறப்பான நாளாக அமையும்.

கும்பம்:
இன்று நீங்கள் நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும், இது நாள் முழுவதும் கவலையாக இருக்கும். உங்கள் துணைவரிடம் ரகசிய தகவலை பகிர்ந்து கொள்ளுமுன் யோசியுங்கள். முடிந்தால் அதைத் தவிர்க்கப் பாருங்கள். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். எந்த புதிய திட்டத்தையும் தொடங்குவ‌தற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கவும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும், மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் ஆலோசிக்காமல் ஏதெனும் நீங்கள் திட்டமிட்டிருந்தால் அது எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

மீனம்:
உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள தனிப்பட்ட உறவுகளை தவறாகப் பயன்படுத்துவது உங்கள் மனைவிக்கு கவலையை ஏற்படுத்தும். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். ஒரு அன்பான தகவல் மூலம் இன்றைய நாள் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். இன்று அலுவலகத்தில் இனிமையான சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு இந்த அளவுக்கு இனித்ததில்லை.