Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (29.01.2023)

சென்னை: சுபகிருது ஆண்டு தை மாதம் 15ம் தேதி (Today Rasi Palan) ஞாயிற்றுக்கிழமை. சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது.

மேஷம்: செல்வம் அதிகரிக்கும். அதோடு செல்வாக்கையும் சேர்ப்பீர்கள். நில விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். கனிவாக நடந்து காதலியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். இரவு, பகல் என்று பாராமல் வேலை பார்ப்பீர்கள்.

ரிஷபம்: பொருளாதாரம் உயர்த்தி உறவினர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். அரசு வேலையை அலுப்பில்லாமல் செய்வீர்கள். போகின்ற இடம் முழுவதும் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை புகுத்துவீர்கள்.

மிதுனம்: கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும். இன்று உங்களுக்கு சிறிது காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்கின்ற இடத்தில் தேவையில்லாத பேச்சால் சண்டையில் முடியும். மந்தமாக நடக்கும் வியாபாரத்தால் மனம் சங்கடப்படுவீர்கள். இன்று சில கருத்து வேறுபாட்டால் காதலியை பிரிய நேரிடும்.

கடகம்: கடனை அடைப்பதற்கு சற்று சிரமப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்காமல் தடுமாறுவீர்கள். வியாபாரத்தில் சறுக்கல்களை சந்திக்க நேரிடும். வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கு சரியும். உடல் உபாதைகளால் அவதிப்படுவீர்கள்.

சிம்மம்: தங்க நகைகள் வாங்கி மனைவியை மகிழ்ச்சியடைய செய்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வேகம் காட்டி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள்.

கன்னி: திடீரென்று பணவரவு அதிகரிக்கும். ஆர்டர்களைப் பெருக்கி முதலாளியின் பாராட்டையும் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இதனால் மதிப்பும் உயரும். கனிவோடு நடந்து காதலியின் மனதை வெல்வீர்கள்.

துலாம்: தந்தையரின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். தொழிலுக்காக அரசாங்க கடன் பெறுவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு அடைவீர்கள். தாய் மாமனுக்கு தக்க சமயத்தில் உதவி செய்ய நேரிடலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும்.

விருச்சிகம்: எடுத்த காரியத்தில் சற்று தடங்கல் வரும். தொழிலில் முடக்க சிலர் முயல்வார்கள். சமுதாயத்தில் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். கைகூடி வரும் நேரத்தில் காதலியின் பின்னடவை சந்திப்பீர்கள். சந்திராஷ்டம காலம் சற்று பொறுமை தேவை.

தனுசு: வெளியூர் பயணங்கள் வெற்றியை தரும். தங்கையின் திருமணத்தை நடத்துவதற்கு பணத்தை பெருக்குவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைப்பீரகள். முக்கியமான கடன்களை அடைப்பீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

மகரம்: தொழில் எதிரிகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பண பற்றாக்குறைக்காக நண்பர்களிடம் கடன் வாங்க நேரிடலாம். விளையாட்டாக சொன்ன பொய்யால் காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட வியாதியால் பாதிக்கப்படுவீர்கள்.

கும்பம்: பெற்ற மகன், மகளின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க நேரிடலாம். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உயர்ந்து நிர்பீர்கள். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

மீனம்: விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வீடு குடியேறுவதற்கு நாள் குறிப்பீர்கள். வங்கி சேமிப்பை உயர்த்துவீர்கள். கம்பீரமாக பேசி செல்வாக்கை அதிகரிப்பீர்கள். தொழிலில் மிகப்பெரிய வெற்றியை சந்திப்பீர்கள். மன உறுதியால் உடல் உபாதையில் இருந்து வெளி வருவீர்கள்.