Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (27.01.2023)

சுபகிருது ஆண்டு தை மாதம் 13ம் தேதி (Today Rasi Palan) வெள்ளிக்கிழமை. சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை 3.59 மணி வரை சஷ்டி. பின்பு சப்தமி. இன்று அதிகாலை 1.24 மணி வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது.

மேஷம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கும் திடீர் பணவரவுக்கும் வாய்ப்புண்டு. குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

ரிஷபம்: எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் சமாத்துவிடுவீர்கள். உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடியாக முடியும். உற்சாகமான நாள்.

மிதுனம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. சிலருக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும். உறவுகளால் நன்மை உண்டாகும்.

சிம்மம்: செலவுகள் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி: உறவுகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். இறைவழிபாடு தேவை.

துலாம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும்.

தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்: எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கும்பம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களின் நன்மைக்காகக் கடுமையாக உழைக்க வேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்கள் ஏற்படலாம். பேசும்போது பொறுமை அவசியம்.