Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (8.01.2023)

சுபகிருது ஆண்டு மார்கழி மாதம் 24ம் (Today Rasi Palan) தேதி ஞாயிற்றுக்கிழமை. சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 7.02 மணி வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று அதிகாலை 03.24 மணி வரை புனர்பூசம். பின்னர் பூசம். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்: புதிய வேலைக்கு செல்வீர்கள். இணைந்து தொழில் செய்வதில் லாபம் கிடைக்கும். விட்டுக் கொடுத்து போவதால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். அனைத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

ரிஷபம்: பொருளாதாரம் உயர்ந்து நல்ல அந்தஸ்து கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயரும். மறைமுக எதிர்ப்புகள் ஒழிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

மிதுனம்: குடும்பத் தேவையையும் பூர்த்தி செய்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் சிக்கலை கடப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்ப்பீர்கள். ரத்த அழுத்தத்தை குறைக்க இயற்கை உணவுகளை உட்கொள்வீர்கள்.

கடகம்: தொழிலில் முதலீடு செய்வதை குறைப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கத்தை சந்திக்கலாம். போட்டிகளை சமாளிக்க சிரமப்படுவீர்கள். வெளியூர்களில் இருந்து வரவேண்டிய செய்திகளை தாமதமாக பெறுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கருத்துக்களைத் திணிக்க முயற்சி செய்யாதீர். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துங்கள். வெளியூர் பயணத்தின் போது உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள்.

கன்னி: தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி பெறுவீர்கள். கட்டிடத் தொழிலாளர்கள், எலெக்ட்ரிசியன்கள், சிறு தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் அடைவீர்கள். வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தியை பெறுவீர்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடு செய்வீர்கள்.

துலாம்: கால நேரம் பார்க்காமல் வேலை செய்து கடனை அடைத்து விடுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். வேலை இடங்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். போட்டி பந்தயங்களில் நல்ல லாபம் பெறுவீர்கள். கடல் கடந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்: தடைபட்ட வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். வேலை இடங்களில் சுமூகமான நிலையை உருவாக்குவீர்கள். தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். நல்ல பலனைப் பெறும் வகையில் வெளியூர்ப் பயணங்கள் அமையும். உறவினர் மத்தியில் மரியாதையை பெருக்குவீர்கள்.

தனுசு: கடுமையாக வேலை செய்தாலும் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காது. அனாவசியமான காரியங்களில் தலையிட்டால் அவமானங்களை சந்திக்க நேரிடம். பெண்களிடம் தள்ளி நின்றே பழகுங்கள். வங்கி வேலைகள் தாமதமாகி மன அழுத்தம் அடைவீர்கள்.

மகரம்: உற்சாகமான பேச்சின் காரணமாக உறவுகளைப் பலப்படுத்துவீர்கள். வீட்டில் திருமணப் பேச்சு வார்த்தைகள் நடக்கும். குடும்பத்தில் குதூகலத்தை உண்டாக்குவீர்கள். வேலை இடங்களில் இருந்த பிரச்சனை நீங்கும். அரசுப் பணியாளர்கள் அதிகமான நன்மை அடைவீர்கள்.

கும்பம்: தடைகளை உடைத்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். எதிரிகள் உங்களை வீழ்த்தப் பார்ப்பார்கள். சாதுரியமாக சமாளித்து விடுவீர்கள். சொந்த பந்தங்களில் சின்னச் சின்ன சிக்கல்கள் சந்திக்கலாம். வாகனங்களில் செல்லும்போது நிதானம் தேவை.

மீனம்: சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். மனைவி குழந்தைகளால் மனநிம்மதி இழழக்க நேரிடும். நண்பர்கள் உதவியால் தொழிலை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிக நன்மையை அடைவீர்கள். கடனை அடைக்க சற்று போராட்டம் நடத்த நேரிடும்.