Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (31.12.2022)

சென்னை: சுபகிருது ஆண்டு மார்கழி (Today Rasi Palan) மாதம் 16ம் தேதி சனிக்கிழமை 31.12.2022. சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.28 மணி வரை அஷ்டமி. பின்னர் இரவு 11.46 வரை நவமி. பின்பு தசமி. பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

மேஷம்: தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். ஒரு பிரச்சனை முடிவுற்றால் அடுத்த பிரச்சனை ஆரம்பித்துவிடும். கூட இருப்பவர்கள் கெடுதல் செய்ய நினைப்பார்கள். உயர் அதிகாரிகள் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சின்னச் சின்ன கவலைகள் வந்து போக நேரிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை பகைக்க வேண்டாம். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சனம் செய்யாதீர்கள். நன்றி மறந்த ஒவருரை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் கொடுத்த கடனை வசூல் செய்வதில் தாமதம் ஏற்படும்.

மிதுனம்: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வழியில் ஒற்றுமை கிடைக்கும். விரும்பிய பொருட்களை இன்று வாங்குவீர்கள். தாயாருக்கு ஆதரவாக பேசுவீர். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நாள் நல்ல நாளாக உங்களுக்கு அமையும்.

கடகம்: இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் ஆலோசித்து முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை எதிர்பார்ப்பார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்ள நேரிடும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

சிம்மம்: குடும்பத்திற்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்கள் பிரார்த்தனை நிறைவேறும். அக்கம், பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள். கனவு நனவாகக் கூடிய நாள்.

கன்னி: பழைய நண்பர்கள் உதவுவார்கள். புதிய வேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பெரிய இடத்தின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பார்கள்.

விருச்சிகம்: கணவன், -மனைவிக்குள் இருந்த சண்டைகள் தீர்ந்து அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

தனுசு: ராசியில் சந்திரன் இருக்கும் நிலையில் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழப்ப வேண்டாம். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சனைகள் வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

மகரம்: கணவன்-, மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பர செலவு செய்வதால் சேமிப்புகள் குறையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். எளிய உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரலாம். வேலையிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்: உங்கள் இலக்குகளை நோக்கி பயணம் மேற்கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். வேலையில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

மீனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உங்களுக்கு பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக நடப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிக்கும் நாள்.