Today Horoscope : இன்றைய ராசிபலன் (04.08.2022)

Astrology : வியாழக்கிழமை உங்களின் ராசிபலன் எப்படி உள்ளது என்பதனை (Today horoscope) அறிந்து கொண்டு பயனடையுங்கள்.

மேஷம்:
(Astrology) பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். முதலீடு பெரும்பாலும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று நீங்கள் இதைப் புரிந்து கொள்ளலாம், ஏனென்றால் இன்று எந்த பழைய முதலீட்டிலிருந்தும் நீங்கள் லாபம் பெற முடியும். முடிவெடுப்பதில் பெற்றோரின் உதவி அவசியமானதாக இருக்கும். சிலருக்கு திருமண வாய்ப்பு கூடி வரும். வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடனும் சார்மிங்காகவும் இருங்கள். உங்கள் சார்மிங் மந்திரத்தின் ரகசியம் மிக சிலருக்கு மட்டுமே தெரியும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும். இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும்.

ரிஷபம்:
தேவையில்லாத சிந்தனைகள் மனதில் நிரம்பியிருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இன்று உங்கள் பணம் சேமிக்கும் முயற்சியில் வெற்றிபெற மாட்டிர்கள், இருப்பினும் நீங்கள் இவற்றை எண்ணி கவலை பட வேண்டாம். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக சீக்கிரமாக மாறக்கூடும். உங்கள் பணத்தைக் கையாள உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுமதிக்காதீர்கள். தவறான தகவல் தொடர்பு அல்லது தகவல் உங்களை டல்லாக்கும். இந்த ராசியின் வணிகர்கள் இன்று வணிகத்துடன் பயணிக்க வேண்டியிருக்கும். இந்த பயணம் உங்களுக்கு மன அழுத்தத்தை அளிக்கும். வேலையில் இருப்பவர்கள் இன்று அலுவலகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று நாள் நல்ல முறையில் செல்ல வேண்டும் என்றால் உங்கள் துணை மூட் அவுட் ஆக இருக்கும் போது மௌனம் காப்பது சிறந்தது.

மிதுனம்:
ஆயிலான காரமான‌ உணவைத் தவிர்த்திடுங்கள். உங்கள் நண்பர்களின் உதவியால் நிதிப் பிரச்சினை தீர்ந்துவிடும். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரொமாண்டிக் மன நிலையில் திடீர் மாற்றம் மிகவும் அப்செட் ஆக்கும். புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போடுங்கள். எப்படியிருந்தாலும், உங்கள் நேரத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.உங்கள் நேரத்தை கவனிக்கவிட்டால், அது உங்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திருமண வாழ்க்கையில் சில பின் விளைவுகள் இருக்க கூடும். அதனை இன்று நீங்கள் சந்திப்பீர்கள்.

கடகம்:
(Astrology) உங்கள் உடலை ரீசார்ஜ் பண்ண முழு ஓய்வு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அயற்சி வந்து குறுகிய மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைத் தரும். இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். இன்று நீங்கள் ஒரு புதிய புத்தகத்தை வாங்கி படிக்க‌லாம். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு விஷத்தை ஸ்பெஷலாக செய்வார்.

சிம்மம்:
இன்று நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து மிக எச்சரிக்கையுடன் செல்லவும், இல்லையெனில் உங்கள் விலை மதிப்புமிக்க பொருட்கள் திருட்டு போவதால் உங்கள் மனநிலை பாதிக்க படும். உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். காதலர்கள் குடும்ப உணர்வுகள் பற்றி அதிகம் கவலைப்படுவார்கள். பணம் பண்ணும் புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு மதிப்பீடு செய்வதற்கான நேரம் இது. இன்று உங்கள் துணை உங்கள புகழ்ந்து மீண்டும் உங்கள் மேல் காதல் வயப்படுவார்.

கன்னி:
போதும் என்ற வாழ்வுக்கு மனதின் உறுதியை மேம்படுத்துங்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். மதம் தொடர்பான‌ இடம் செல்வது அல்லது உறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நிலுவையில் உள்ள திட்டங்களும் பிளான்களும் இறுதி வடிவத்துக்கு வரும். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. இன்று உங்கள் துணை உங்களை ஒரு தேவதையை போல நடத்துவார்.

துலாம்:
(Astrology) உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சற்று பின்னடைவாக உணர்வீர்கள் – சிறிது ஓய்வும், சத்துமிக்க உணவும் உங்கள் சக்தியை அதிகரிக்க நிறைய உதவியாக இருக்கும். பண லாபத்தைத் தரும் அறிவுப்பூர்வமான புதிய ஐடியாக்கள் சொல்வீர்கள். உணர்ச்சியமான ரிஸ்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ரொமாண்டிக் உணர்வுகளுக்கு எதிர்பலனும் இன்று கிடைக்கும். காதலில் இன்று உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான நாள். உங்கள் நீண்ட நாள் ஆசையை உங்கள் துணை இன்று சர்ப்ரைசாக நிறைவேற்றுவார். இன்று, யாருக்கும் தெரிவிக்காமல், உங்கள் வீட்டில் தொலைதூர உறவினரின் வருகை இருக்கக்கூடும், இது உங்கள் நேரத்தைக் கெடுக்கும்.நீங்கள் திருமண பந்த்துத்துக்குள் நுழையும் முன் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகள் அனைத்தும் நிஜமாக கூடும். உங்கள் துணை உங்கள் உயிரில் கலந்தவர்..

விருச்சிகம்:
ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். வரி ஏய்ப்பு செய்ய வேண்டாம். சிலருக்கு குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். மாலை நேரத்துக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள். முடிந்தவரை அதை ரொமாண்டிக்காக ஆக்குங்கள். சகாக்களும் சீனியர்களும் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதால் அலுவலக வேலை சூடுபிடிக்கும். இன்று மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். மாறாக இன்று உங்கள் ஓய்வு நேரத்தில் ஒருவரை சந்திக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள், தனிமையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் துணை இது போல அற்புதமாக இது வரை இருந்ததில்லை. உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து நீங்கள் இன்று ஒரு இனிய சர்ப்ரைசை எதிர்பார்க்கலாம்.

தனுசு:
மாலை நேரம் பதற்றம் நிறைந்ததாக உணர்வுகளின் கலப்பாக இருக்கும். ஆனால் கவலைப்பட ஏதும் இல்லை. ஏனெனில் ஏமாற்றத்தை விட மகிழ்ச்சி அதிக ஆனந்தம் தரும். நீங்கள் ஒருவரிடமிருந்து கடன் திரும்பக் கேட்கிறீர்கள். திருப்பித் தருவார்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். யாராவது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம், கவனமாக இருக்கவும். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். நாளின் ஆரம்பம் கொஞ்சம் சோர்வாக இருக்கலாம், ஆனால் நாள் முன்னேறும்போது நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறத் தொடங்குவீர்கள். நெருங்கிய ஒருவரைச் சந்திப்பதன் மூலம் இந்த நேரத்தை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் உறவினரால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படலாம்.

மகரம்:
( Astrology) பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள். உங்களை அறியாமல் உங்கள் கருத்துகள் வேறொருவரின் சென்டிமெண்டை காயப்படுத்தலாம். இன்று நீங்கள் அறியப்படாத சில மூலங்களிலிருந்து பணத்தைப் பெறலாம், இது உங்கள் பல நிதி சிக்கல்களை நீக்கும். குடும்பத்தினர் மனதை காயப்படுத்தாமல் தவிர்ப்பதற்காக, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும். குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்கால் சகாக்களிடம் இருந்து குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரும். நீங்கள் முக்கியமான வேலை செய்ய மறந்து விடுவீர்கள். இன்று வாழ்க்கையே இனிமையாக உங்களுக்கு தோன்றும் ஏன் என்றால் உங்கள் துணை உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ப்ளான் வைத்துள்ளார்.

கும்பம்:
மனதை தெளிவாக வைத்திருக்க குழப்பத்தையும் வெறுப்பையும் தவிர்த்திடுங்கள். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். முதியவர்களும் குடும்பத்தினரும் அன்பும் கவனமும் காட்டுவார்கள். உங்கள் உறவில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் தீரும் அருமையான நாள் இது. அலுவலகத்தில் இதுவரை நீங்கள் யாருடன் பேச வேண்டுமென முயற்சி செய்தீர்களோ அவரிடம் பேசும் நல்ல வாய்ப்பு இன்று கிடைக்கும். உலகக் கூட்டத்தில் எங்காவது தொலைந்துவிட்டதாக நீங்கள் உணர்ந்தால், உங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்கள் ஆளுமையை மதிப்பிடுங்கள். இந்த உலகமே இன்று முடிவதாய் இருந்தாலும் உங்கள் துணையின் அன்பான பிடியில் இருந்து உங்கலை யாராலும் விலக்க முடியாது.

மீனம்:
உங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய வகையில் விளையாட்டுகளில் நீங்கள் ஜாலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது. பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். சில த்ரில்லான செய்திகளை பிள்ளைகள் கொண்டு வரலாம். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். இன்று, ஓய்வு நேரத்தைப் பயன்படுத்த, உங்கள் பழைய நண்பர்களைச் சந்திக்க நீங்கள் திட்டமிடலாம். நகைச்சுவையாக பேசிக் கொண்டிருக்கும் போது பழைய விஷயத்தை பேசுவதால் வாக்குவாதம் ஏற்படலாம்