Sabarimala: சபரிமலை; மீண்டும் பெண்கள் நுழைய சர்ச்சை

சபரிமலை யாத்திரை தொடங்கும் போது காவல்துறையினருக்கு கையேடு வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா: சபரிமலை (Sabarimala) யாத்திரை கடந்த இரு தினங்களுக்கு முன் துவங்கி, கோவிலில் மண்டல பூஜை துவங்கியது. யாத்திரை தொடங்கும் போது காவல்துறையினருக்கு கையேடு வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் சபரிமலை கோவிலில் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் (handbook issued to the policemen), “2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆட்சேபனைகள் எழுந்ததால், மாநிலத்தில் உள்ள எல்டிஎஃப் அரசு கையேட்டை திரும்பப் பெற்றது.

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு, மாதவீடு நின்று, மூத்த வயதுடைய பெண்களும் கோயிலுக்குள் செல்லலாம் (Women can also enter the temple) என்று கூறியது. இப்போது மறைமுகமாக கையேட்டில் அதே உத்தரவைக் குறிப்பிட்டு, அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்தர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு தயாராக இல்லை (The government is not ready to implement the court order). ஆனால், இந்த விவகாரம் மீண்டும் கையேட்டில் குறிப்பிடப்பட்டிருப்பது பாஜகவின் கோபத்திற்கு இலக்காகி உள்ளது. அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்து கேரள தேவஸ்வம் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன், “இது முன் அச்சிடப்பட்ட கையேடு. கையேட்டை திரும்பப் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இந்துக் கோவிலான சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் மாதவிடாய் நிகழ்பருவப் பெண்கள் (10-50 வயது) நுழைவதற்குச் சட்டப்படியாக 1991 முதல் 2018 வரைத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய உச்ச நீதிமன்றம் ,பாலின வேறுபாடின்றி அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்தது. குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டிருந்த அனுமதி மறுப்பானது, அரசியலமைப்புச் சட்டத்தித்திற்கு எதிரானது என்றும், சட்டப்பிரிவு 14 இன்கீழ் சம உரிமைக்கும், சட்டப்பிரிவு 25 இன்கீழ் இந்தியாவின் சமயச் சுதந்திரத்திற்கும் எதிரானது (It is also against India’s religious freedom) என்றும் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல் தீர் நடுவர் அமர்வு, அனுமதிக்கான தடை உத்தரவை ரத்து செய்தது.