Lotus flower: ‘பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும்’ என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு பணம் இல்லையேல் எதுவும் இல்லை என்கிற நிலைமை வந்துவிட்டது. பணத்தால் எல்லாவற்றையும் அடைந்துவிட முடியாது என்றாலும், பணத்தால் அடைய முடியாது விஷயங்கள் மிகவும் குறைவுதான்.
எல்லோருக்குமே, தான் பணம் சம்பாதிக்க வேண்டும், நல்ல வருமானம் கிடைக்க வேண்டும், சுயமாக உழைத்து பணக்காரனாக வேண்டும் என்கிற எண்ணம் நிச்சயம் இருக்கும். இப்படி வாழ்க்கையில் உயர நினைப்பவர்கள் செய்ய வேண்டிய மிக எளிய பரிகாரங்களில் ஒன்றாக இருக்கக் கூடிய இந்த பரிகாரத்தை பற்றிய சூட்சம தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.
தாமரை மலருக்கு உகந்த தெய்வங்கள் பெருமாள், சிவபெருமான், மகா லட்சுமி, விநாயகர் மற்றும் அம்பாள் ஆகிய ஐவர் ஆவார்கள். இவர்கள் கொடுக்கும் சக்தியை கொண்டுள்ளவர்கள். இம்மலரை இவர்களுக்கு நீங்கள் சமர்ப்பித்து வழிபட்டு வந்தால், வேண்டியது வேண்டியபடி கிடைக்கும் என்கிற ஐதீகம் உண்டு. கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் அருளும் முப்பெரும் தேவியர் அமர்ந்திருக்கும் இந்தத் தாமரை மலர் மூன்று சக்திகளையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. எனவே இதனை இத்தகைய தெய்வங்களுக்கு அந்தந்த கோவில்களுக்கு சென்று, அந்தந்த தெய்வங்களுக்கு உகந்த கிழமையில் நீங்கள் குறிப்பாக சமர்பிக்க வேண்டும்.
21 தாமரை மலர்களை கொஞ்சம் முகம் மலர்ந்தார் போல வாங்கிக் கொள்ள வேண்டும். இதை மாலையாக கோர்த்து இந்த தாமரை மலர் மாலையை உங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து சமர்ப்பித்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஈசனுக்கும், விநாயகருக்கும் திங்கட் கிழமையிலும், மகாலட்சுமிக்கும், அம்பாளுக்கும் வெள்ளிக் கிழமையிலும், திருமாலுக்கு சனிக் கிழமையும் கொண்டு போய் தாமரை மலரை சாற்றி நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வழிபட்டு வந்தால் நீங்கள் எத்தகைய வேண்டுதல்கள் வைத்திருந்தாலும் அது தடையில்லாமல் பலித்துவிடும்.
தாமரை மலரை ஒற்றைப்படையில் மாலையாக கோர்க்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 21 தாமரை மலர்களை கோர்க்கும் போது மொட்டுகளாக இல்லாமல் சற்று மலர்ந்தால் போல இருக்க வேண்டும். இப்படி நீங்கள் உங்களுடைய இஷ்ட தெய்வங்களுக்கு சாற்றி வழிபட்டு வாருங்கள். சேராத செல்வம் எல்லாம் இனி சேர ஆரம்பிக்கும். உங்களுடைய வருமானம் பெருகும். குடும்ப அந்தஸ்து மற்றும் பொருளாதாரம் படிப்படியாக உயரத் தொடங்கும்.
இதையும் படிங்க: ஆயுதப்படை காவலர் தற்கொலை விவகாரம் : கடலூர் கந்துவட்டி அனிதா கைது



