Karthika Deepa Festival : கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை: Karthika Deepa Festival: Consultation meeting regarding the progress : திருவண்ணாமலையில் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசு நேற்று ஆலோசனை (

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசு நேற்று ஆலோசனை ( The Tamil Nadu government discussed the preparations for Deepa festival yesterday) நடத்தியது. இந்த ஆலோசனையின் போது, திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகள், குறிப்பாக சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து, தூய்மைப்பணி ஆகியவற்றைப் பற்றி குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கேட்டறிந்தார்.

நடத்தியது. இந்த ஆலோசனையின் போது, திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகள், குறிப்பாக சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து, தூய்மைப்பணி (Basic amenities, especially sanitation, drinking water, transport, sanitation) ஆகியவற்றைப் பற்றி குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் அருணாசலேஸ்வரர் கோவில் திருவிழா டிச. 6 ஆம் தேதி நடை பெற உள்ளது. இதற்கு 10 நாள்களுக்கு முன்பாகவே கோயிலில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கும். தீபப் பெருவிழா டிச. 6 ஆம் தேதி நடைபெற்றாலும் அதற்கு முன்பாகவே திருவண்ணாமலைக்கு அதிகளவில் பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்று குறைந்த நிலையில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் (A large number of devotees will come when the corona infection is low) என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதையடுத்து பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் (District Collector P. Murugesh), காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, பொதுத்துறைச் செயலாளர் டி.ஜெகந்நாதன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச்செயலாளர் பிரதீப் யாதவ், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் கோபால், இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச்செயலாளர் சந்தரமோகன், சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், உள்நாட்டுப் பிரிவு ஐ.ஜி ஈஸ்வர மூர்த்தி, வடக்கு மண்டல பாதுகாப்பு ஐ.ஜி கண்ணன், உளவுப் பிரிவு ஐ.ஜி செந்தில்வேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .