Kolluru Temple: உலக அமைதிக்காக தமிழ்நாட்டிலிருந்து கொல்லூர் மூகாம்பிகை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள்

Devotees from Tamil Nadu came to Kollur Mookambika Darshan for world peace
Image/News Next Tamil

Kolluru Temple: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து ரயில் மூலமும் தனியார் பஸ் மூலம்  மங்களூர் கதிரி கோவிலுக்கு வந்து அடைந்த இருநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முதலில் கதிரி கோவிலில் தரிசனம் செய்து பின்னர் தியானம் செய்தனர் அங்கிருந்து பக்தர்களுக்கு என மூன்று பஸ்கள் மூலம் கொல்லூர் மூகாம்பிகை கோவில் மற்றும் உடுப்பி கிருஷ்ணர் கோவில் தலை காவேரி போன்ற பகுதிகளுக்கு பஸ்ஸில் அழைத்துச் சென்றனர் அவர்களுக்கு

 மங்களூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அனைத்து தங்கும் வசதி வாகன வசதிகள் மற்றும் கோவில்களுக்கு கூட்டிச் சென்று அனைவரையும் ஒன்று சேர்த்து வழிநடத்தி தியானம் செய்வதற்கும் ஏற்பாடு செய்து இருந்தனர் அவர்களுடன் பலரும் கைகோர்த்து இருந்தனர்

வந்த பக்தர்கள் அனைவரும் இந்துத்துவம் வளர்ச்சி அடைந்து மீண்டும் இந்தியா மீண்டும் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் எனவும் மற்றும் உலக அமைதி பெற வேண்டும் எனவும் நாட்டில் அனைவரும் பொருளாதாரத் தட்டுப்பாடு இல்லாமல் நன்றாக தொழில் வளம் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் எனவும் பல கோவில்களில் பொது பிரார்த்தனை செய்ததாக வந்த பக்தர்கள் தெரிவித்தனர்

வந்த பக்தர்கள் அனைவரும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் கடவுளின் ஆசி பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வதாகவும் எங்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்