Tirupati Temple darshan tickets : திருமலை திருப்பதி கோயிலின் டிசம்பர் மாதத்திற்கான ரூ. 300 தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருப்பதி: December month’s, Tirupati Temple 300 Rupees darshan tickets will be released tomorrow : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலின் டிசம்பர் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (வெள்ளிக்கிழமை) ஆன்லைனில் வெளியாகிறது என்று திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப் படுவதில்லை. சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் (Saturday, Sunday and Monday) சர்வ தரிசன டோக்கன்கள் நாள் தோறும் 25 ஆயிரம் வீதமும், மற்ற வார நாட்களில் நாள்தோறும் 15 ஆயிரம் வீதமும் வழங்கப்படுகின்றன.

இது தவிர ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்களும் தினசரி 20 ஆயிரம் வீதம் ஆன்லைனில் முன்கூட்டியே முந்தைய மாதத்திலேயே வழங்கப்பட்டு விடுகிறது. மேலும், 65 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட‌ கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் (Mothers with infants below 5 years of age), வெளிநாடு வாழ் இந்திய பக்தர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சுற்றுலாத்துறை பஸ் பயணிகள், விஐபி சிபாரிசு கடிதங்கள் மூலம் வரும் பக்தர்கள், ஸ்ரீ வாணி அறக்கட்டளையின் கீழ் ரூ .10,500 செலுத்தி வரும் பக்தர்கள், நேரடியாக வரும் விவிஐபிக்கள் என நாள்தோறும் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

நாளை வெள்ளிக்கிழமை 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி கோவிலின் இணையதளத்தில் (On Friday 11th at 10 AM on Tirumala Tirupati Temple website), வரும் டிசம்பர் மாதத்திற்கான ரூ .300 சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்கள் (டோக்கன்கள்) வெளியிடப்பட உள்ளது என கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.