Xiaomi Band: சியோமி பேண்ட் 7 வெளியீட்டு விவரம்

Xiaomi Band 7
சியோமி பேண்ட் 7 வெளியீட்டு விவரம்

Xiaomi Band: ரெட்மி நோட் 11T சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், மற்ற சாதனங்களிலும் சியோமி கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்திய அறிவிப்பின் படி சியோமி பேண்ட் 7 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்போவதாக சியோமி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர்களில், சியோமி பேண்ட் 7 மாடல் மே 24 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

டீசரின் படி புதிய அணியக்கூடிய சாதனம் அதன் முந்தைய மாடலை போன்றே காட்சி அளிக்கும் என தெரிகிறது. Mi பேண்ட் 7 மாடல் அதன் முந்தைய வெர்ஷன்களை போன்றே ஸ்டாண்டர்டு மற்றும் NFC என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை சியோமி பேண்ட் 7 மாடலில் 1.62 இன்ச் AMOLED 192×490 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இது முந்தைய சியோமி பேண்ட் 6 மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை விட 25 சதவீதம் பெரியது ஆகும்.

ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை டிராக் செய்ய இந்த பேண்ட் 7 மாடலில் ஏராளமான அம்சங்கள் மற்றும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்படலாம். இதில் SpO2, இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் பல்வேறு உடல் நலன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.

இதையும் படிங்க: Chennai IIT: இந்தியாவின் முதல் அதிவேக ரெயில் உற்பத்தி பணியில் சென்னை ஐ.ஐ.டி.