Remove BJP and bring Congress : பாஜகவை அகற்றி, காங்கிரஸ் ஆட்சியை மத்தியிலும், மாநிலத்திலும் கொண்டு வருவோம்: டி.கே.சிவகுமார்

தாவணகெரே: We will remove BJP and bring Congress rule at center and state : ஊழல் நிறைந்த பாஜகவை அகற்றி காங்கிரஸ் ஆட்சியை மத்தியிலும், மாநிலத்திலும் கொண்டு வருவோம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் (former Chief Minister Siddaramaiah) 75 வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: ஊழல் நிறைந்த பாஜக அரசை அகற்றி காங்கிரஸ் கட்சியை மாநிலத்திலும், நாட்டிலும் ஆட்சிக்கு கொண்டு வருவோம். சோனியா காந்தியின் கரத்தை வலுப்படுத்துவோம், ராகுல் காந்தியை பிரதமராக்குவோம். சித்தராமையா தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டுத் தலைமையின் கீழ் தேர்தலை சந்திப்போம். இந்த மாநிலத்துக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியை விதான சவுதாவின் மூன்றாவது மாடியில் அமர வைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி பாடுபட இன்று நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

சித்தராமையாவை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவராக மட்டும் கருத வேண்டாம். அவர் அனைத்து மதங்கள் மற்றும் ஜாதிகளின் தலைவர் (Leader of all religions and castes). மேலும் மாநில மக்களுக்கு சேவை செய்ய சித்தராமையாவுக்கு பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். மாநிலத்தில் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. இதற்கு முடிவுகட்ட வேண்டும். அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இதற்காக‌ பாஜக அரசை அகற்றுவோம். இன்று அனைவரும் அந்த உறுதிமொழியை ஏற்போம். இந்தியாவில் வாழும் நாம் அனைவரும் புண்ணியம் செய்வர்கள். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. அதே நேரத்தில், எங்களின் தலைவர் சித்தராமையாவின் 75 வது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். நாட்டுக்கு கொண்டாட்டம், காங்கிரசுக்கு கொண்டாட்டம், சித்தராமையாவுக்கு கொண்டாட்டம், உங்களுக்கும், எங்களுக்கும் கொண்டாட்டம்.

மாநிலத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். காங்கிரஸ் வலிமை இந்த‌ நாட்டின் வலிமை. காங்கிரஸின் வரலாறு இந்த நாட்டின் வரலாறு. சித்தராமையாவின் சக்தியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். 2013 இல் கட்சி ஆட்சிக்கு வந்ததும் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சித்தராமையாவை முதல்வராக நியமித்தனர். பசவ ஜெயந்தி நாளில் அவர் பதவியேற்றார். காங்கிரஸ் கட்சியின் தத்துவம் பசவண்ணரின் தத்துவம் (The philosophy of the Congress party is the philosophy of Basavanna). சித்தராமையாவின் தலைமையிலான‌ ஆட்சியின் போது இந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த நாங்கள் இங்கு கூடியுள்ளோம். இந்த நிகழ்ச்சி பற்றி சித்தராமையா என்னிடம் கூறும்போது நானும் அங்கு இருந்தேன். ராகுல் காந்தி இங்கு வர சம்மதித்ததர்காக‌ மாநில மக்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியை விதான சௌதாவின் மூன்றாவது மாடிக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஊழல் பாஜக‌ அரசை அகற்ற உறுதி எடுக்க வேண்டும். நீங்கள் அனைவரும் தற்போது உள்ள‌ அரசை அகற்ற உறுதி ஏற்க வேண்டும். இனிமேல் இதுவே நமது நோக்கமாக இருக்க வேண்டும். சித்தராமையா காலத்தில் நாங்கள் அமைச்சர்களாக பணியாற்றினோம். அவருடைய திட்டங்கள் இந்த நாட்டின் ஏழைகளுக்காகவே இருந்தன. சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சில மணி நேரத்தில், எந்த ஒரு ஏழையும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காக அனைத்து வகுப்பினருக்கும் அன்ன பாக்யா திட்டத்தை (Anna Bhagya Scheme) அமல்படுத்தினார்.

விவசாய நிலம், சாலை, தொழில், பாசனத் திட்டம், உலகின் மிகப்பெரிய சோலார் பார்க், விவசாயிகளுக்கு 7 மணி நேரம் மும்முனை மின்சாரம் உள்ளிட்ட பல மக்கள் திட்டங்களை வழங்கியுள்ளோம். இதற்கெல்லாம் காரணம் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுதான். நான், சித்தராமையா மற்றும் மேடையில் இருக்கும் தலைவர்களால் மட்டும் ஆட்சியை கொண்டு வர முடியாது. மாநிலத்தில் ஆளும் ஊழல் பாஜக அரசை அகற்றி, காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர மக்களிடத்தில் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். இதுவரை இருந்தது வரலாறு, வரப்போவது எதிர்காலம். அடுத்த ஆண்டு மாநிலத்தில் காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வர (To bring Congress to power in the state)உறுதி எடுக்க வேண்டும்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 75 ஆண்டு தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் பெங்களூரு வந்து ராயண்ணா சிலை முதல் பசவனகுடி தேசிய கல்லூரி மைதானம் வரை பேரணியாக செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்க வேண்டும்.சித்தராமையாவை வெறும் பிற்படுத்தப்பட்ட தலைவராக சித்தரிக்காதீர்கள். அவர் அனைத்து இனம், மதம், வர்க்கதிற்குமான‌ தலைவர். சித்தராமையாவின் நல்ல ஆரோக்கியம் (Siddaramaiah’s good health) பெற்று, இந்த மாநிலத்திற்கு மேலும் சேவை செய்ய நான் வேண்டுகிறேன் என்றார்.