Heavy rain Warning withdrawn : தமிழகத்தில் பலத்த மழைக்காக வழங்கப்பட்ட எச்சரிக்கை அறிவுரை வாபஸ்

சென்னை: Warning advisory issued for heavy rain withdrawn : பலத்த மழைக்காக வழங்கப்பட்ட எச்சரிக்கை அறிவுரை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (நவ.20) முதல் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் (It will rain heavily for 3 days) எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மழை பாதிப்பு ஏற்படும் என கருத்தப்பட்ட‌ மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது (Northeast Monsoon has started and it is raining here and there all over Tamil Nadu). சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அண்மையில் மழை பெய்து ஓய்ந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ.20) முதல் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த எச்சரிக்கையின் அடிப்படையில், அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் (Revenue Management Commissioner SK Prabhakar) கடிதம் அனுப்பியிருந்தாா். அதில், பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையின்படி (According to the Indian Meteorological Department), ஞாயிற்றுக்கிழமை முதல் நவம்பா் 22-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பின்னா், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சாா்பில் சனிக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பல்வேறு மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், பல்வேறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மிக பலத்த மழைக்கான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக பலத்த மழை எச்சரிக்கைக்கான அறிவுரைகளும் திரும்பப் பெறப்படுகின்றன (Rain warnings are also withdrawn) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.